எந்த இருட்டிலும் உன்னை நான் அறிவேன்,
இருள் வானில் செல்ல நட்சத்திரம் போல;
தூக்கத்திலும் உன் ஸ்பரிசம் அறிவேன்,
இரவின் குளிர் தென்றலை போல.....
----------------------------------------------------------------------------------
பசிக்கும்போது ருசித்தன,
ருசித்த உடன் பசித்தது;
உதடுகள்......
----------------------------------------------------------------------------------
ஜாமம் சென்ற இரவை ரசிக்க இரு இதயம் இருந்தும்,
பல ஆயிரம் நட்சத்திரங்கள் நடுவே,
தனிமையில் நிலா....
----------------------------------------------------------------------------------
ஏங்கவைக்கும் இரவு,
நினைவை புரட்டும் காற்று,
உன் முகம் காட்டும் நிலா,
இவை அனைத்திருக்கும் விளங்கவில்லை;
உன் உடல் தான் இங்கு இல்லை,
உன் மனம் என்னிடம் தான், இன்னும் உள்ளது என்று...
-----------------------------------------------------------------------------------
பூக்கள் உள்ள வரை அழகு,
தென்றல் உள்ள வரை சுகம்,
நிலா உள்ள வரை தனிமை,
ரசிக்கும் இதயம் உள்ள வரை கவிதை.....
-------------------------------------------------------------------------------------
காற்றிலாடும் மூங்கிலின் ஓசையா?
இல்லை,
உள்ளே கட்டிலாடும் ஓசையா?
மூஞ்சூர் எலியின் பசி ஓலமா??
இல்லை,
வெட்க முத்த கூச்சலா??
முதலிரவின் அறையை,
ஒட்டுகேட்க்கும் காதுகளின் குழப்பம்......
-------------------------------------------------------------------------------------